வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளவர், அடுத்து அமீரின் படமொன்றில் கதையின் நாயகனாகிறாராம்
Add Asianetnews Tamil as a Preferred Source

- வடிவேலுவின் பத்து சதவீதம் கூட தொடவில்லை, கௌண்டமணியின் இருபத்தைந்து சதவீதம் கூட எட்டவில்லை…ஆனால் இன்று தமிழ் சினிமாவில் காமெடியன்களாக இருப்பவர்கள் சூரி மற்றும் யோகிபாபு. ஒரே மாதிரியான பாடி லாங்வேஜ், டயலாக் டெல்வரி என்று இவர்களின் போக்கு ரசிகர்களுக்கு கொட்டாவி வரவைக்கிறதுதான். ஆனாலும் வேறு வழியில்லை இயக்குநர்களுக்கு! என்றிருந்த நிலையில் சூரி தன் ரூட்டை மாற்றியிருக்கிறார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளவர், அடுத்து அமீரின் படமொன்றில் கதையின் நாயகனாகிறாராம்.
( புஷ்பா புருஷனுக்கு வந்த வாழ்க்கய பாருடா!ன்னு கோலிவுட்டே கொல காண்டாகுது)

- வடிவேலுவை நீண்ட இடைவெளிக்குப் பின் நிச்சயம் பழைய ஃபார்முக்கு கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கப்படும் படம் தான் ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’. இதில் லைக்கா தயாரிப்பு, சுராஜ் இயக்கம் என்பதற்கு இணையாக சந்தோஷ் நாராயணன் இசை என்பது கவனிக்க வைக்கிறது. லண்டனில் கம்போஸிங்கை செய்திருக்கும் சந்தோஷ், வடிவேலுவையும் பாட வைத்துள்ளாராம்.
(என்னவோ பா! இந்த படமும் படுத்துடுச்சுன்னா, வடிவேலுவை கண்டா வரச்சொல்லுங்கன்னு ஆகிடும்)

- ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு தொடர்ந்து நெகடீவ் ரோல் வாய்ப்புகளாகவே வருவதால் கடுமையான கடுப்பில் இருக்கிறார் மனிதர். சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்திற்காக அவரை அணுகினர். குஷியாகி, தன் போர்ஷன் பற்றி கேட்க. வழக்கம்போல் வில்லன்! ஆத்திரம் பொத்துக்கினு வந்தாலும், பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ படமென்பதால் ‘சொல்லி அனுப்புறேன்’ என்று சொல்லி அனுப்பிட்டாராம். ஆனால் இதுவரையில் பதில் மட்டும் சொல்லலையாம்.
(சங்கர் குரு பார்ட் 2 எடுங்க பாஸு)
