Asianet News TamilAsianet News Tamil

நில மோசடி வழக்கு... நடிகர் சூரிக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு...!

அதை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுசம்பந்தமாக விசாரிக்க போலீசார் தயாராக இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Actor Soori land cheating case Chennai High court order
Author
Chennai, First Published Dec 7, 2020, 8:25 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த “வீரதீர சூரன்” என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையுமான, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். 

Actor Soori land cheating case Chennai High court order

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் குடவலா, மற்றும் அன்புவேல்  ராஜன் மீது பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

Actor Soori land cheating case Chennai High court order

இந்த வழக்கில்  முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு,  கடந்த முறை நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Actor Soori land cheating case Chennai High court order

 

இந்த வழக்கில் அன்புராஜன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி சரவீந்திரன் முன்பு ஆஜரான காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடையாறு போலீசார் முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். நடிகர் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நில மோசடி தொடர்பாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் ஆடியோ பதிவு மற்றும் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கூறினார்

இதையும் படிங்க: சினேகா வீட்டில் நடந்த விசேஷம்... குட்டி பாப்பாவுடன் வெளியான க்யூட் குடும்ப போட்டோஸ்...!

அதை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுசம்பந்தமாக விசாரிக்க போலீசார் தயாராக இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios