நடிகர் சூரி, ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பவர்களை மகிழ்விக்கவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கும், மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஒவ்வொரு நாளும் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் இவர் கூறும் கருத்துக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. 

மேலும் செய்திகள்: பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

குறிப்பாக எப்போதும் வேலை வேலை என அலைந்து கொண்டிருந்த போது , குழந்தைகளுடன் நேரம் செலவிட  முடியவில்லை என்றாலும், தற்போது முடிந்த வரை தங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை கழியுங்கள்.

நண்பர்கள் போல நாம் பழகினால் தான் அவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும், நம்மிடம் பயமின்றி பகிர்ந்து கொள்வார்கள். அதே போல் வீட்டில் இருக்கும் பழைய புகைப்படங்களை குழந்தைகளுக்கு காட்டி, குடும்ப உறவுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கூறுங்கள் என இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி நல்ல கருத்துக்களை பெற்றது.

மேலும் செய்திகள்: ஏமாற வேண்டாம்... ரசிகர்களுக்காக 'மாஸ்டர்' பட இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!
 

இதை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தினமும் தூக்கத்திலேயே எழுந்து குளித்து, தூக்கத்திலேயே ஸ்கூல், பின் தமிழ் டியூஷன், ஹிந்தி டியூஷன், இங்கிலிஷ் டியூஷன் போவதாக வருத்தத்தோடு கூறுகிறார் சூரியின் மகள்.

இதற்கு சூரி ஆமாம், இப்படி தூக்கத்திலேயே எல்லாம் செய்தால் எப்படி படிப்பு மண்டையில் ஏறும். முடிந்த வரை விளையாட வேண்டும் என கூறி குழந்தைகளுடன் கிரிக்கெட், ஃபுட் பால் போன்ற விளையாட்டுகளை விளையாடுகிறார். ஒரு போன் கால் வந்ததால் அதில் பேசுகிறார். அப்போது அவருடைய மகன் விளையாடி கொண்டிருந்த பந்தை சூரி மண்டையில் அடிக்க அவர் மயங்கி கீழே விழுகிறார். பின் அவருடைய மகன் குளிர்ந்த நீருக்கு பதில் சுடு தண்ணீரை எடுத்து வந்து சூரி மூஞ்சில் ஊற்ற கலகலப்பாக முடிந்துள்ளது கொரோனா 13 வது நாள் வீடியோ.