தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கமல், விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். 

தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை சினேகா தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். 

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.