Actor Sivi Shekhar has said that PepsiCo is the leader of Pepsi today.
பெப்சிக்கு எதிராக போர்கொடி தூக்கியவர் இன்று பெப்சியின் தலைவராக உள்ளதாகவும் அவரால் நியாயத்தை பேசமுடியவில்லை எனவும் நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால், நடிகர் ரஜினி நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 60க்கு மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் எஸ்வி சேகர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், பெப்சிக்கு எதிராக போர்கொடி தூக்கியவர் இன்று பெப்சியின் தலைவராக உள்ளதாகவும் அவரால் நியாயத்தை பேசமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.
நானாக இருந்தால் அந்த தலைவர் பதவியை தூக்கி எரிந்திருப்பேன் எனவும், அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான அட்டவணை எவ்வாறு பொருந்தும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
