பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்  உடல்நலம் திடீர் என்று மோசமடைந்து விட்டதாகவும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்.பி.பி. நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். 

இதனிடையே கடந்த சனிக்கிழமை முதலே எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மயக்கத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கண் விழிந்து விட்டார் என்ற செய்தி வெளியானது. இதனால் அனைவரும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் கூட கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

ஆனால் நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா  தொற்றுக்காக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை தேறிவருவதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை குடும்பத்தாரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

இதையும் படிங்க:  “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி. உடல் நலம் பெற்று நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென நடிகர் சிவக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலு என்னை விட நீங்கள் 4 வயசு சின்னவர் உங்கள நான் தம்பின்னே கூப்பிடலாம். உலகமே போற்றும் ஒப்பற்ற கலைஞர், நிறைகுடம். 100க்கும் மேலான படங்களில் எனக்காக டூயட் பாடியிருக்கீங்க. நீங்கள் எனக்காக பல வெற்றிப்பாடல்களை பாடியிருக்கீங்க. அதிலும் என்னுடைய 100வது படத்தில் நீங்கள் பாடிய “மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்”, “உச்சி வகுடு எடுத்து” பாடல்களுக்கு நீங்கள் கொடுத்த எமோஷன் மறக்க முடியாதது. வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் நீங்கள், கொரோனாவும் ஒரு சவால் தான் சீக்கிரம் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வாங்க பாலு என நம்பிக்கையூட்டும் விதமாக பேசியுள்ளார்.