சினிமா பிரபலங்கள் என்றால்... அவர்களுடன் இணைந்து எப்படியாவது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது சகஜம் தான். அப்படி பட்ட தருணங்களை பிரபலங்கள் தான் நாசுக்காக தவிர்க்க வேண்டும் இல்லை என்னால் ரசிகர்களுடன் அவர்கள் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வதும் தவறு இல்லை. 

இந்நிலையில் தமிழ் சினிமாவில், 1960 வதுகளில் கதாநாயகனாக அறிமுகமாகி, பின் குணச்சித்திர நடிகர் என்று தற்போது வரை திரையுலகத்தில் தனக்கான ஒரு அடையாளத்தை பதித்திருப்பவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார்.

மேலும் பல்வேறு சொற்பொழிவு, ஓவியம், கவிதை, கதை, என தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் இவரை கண்டு ஆச்சர்யப்படுபவர்கள் பலர்.

இந்நிலையில் இவர்,  ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு ரசிகன் அவருடன் செலஃபீ எடுக்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சிவகுமார் அந்த ரசிகனின் போனை கீழே தள்ளி விட்டார்.

சிவகுமாரை எந்த தொந்தரவும் செய்யாமல் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என முயற்சித்த, அவர் திடீர் என சிவகுமார் இப்படி மோசமாக நடந்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்தார். 

இந்து குறித்த ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.