actor sivakumar meet padmavibushan ilaiyaraja

69 வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண். இந்த விருது இசைக்கடவுள் என்று இசைபிரியர்களால் போற்றப்படும் இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் திரையுலகை சேர்ந்த பலர் இளையராஜாவை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் தொடர்புக்கொண்டும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகர் சிவகுமார், இளையராஜாவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..ராகதேவன் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது. பஞ்சு அருணாசலம் அவர்களால் 'அன்னக்கிளி'- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து படங்களின் வெற்றிக்கு ஆணிவேரா இருந்திருக்கிறார் இளையராஜா.எனது 100-வது படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி '-' சிந்துபைரவி '- படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது.தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது.

எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது. வாழ்க இசைஞானி ஓங்குக அவர் புகழ் ! என கூறியுள்ளார்.