காமெடி சூரிக்கு பிறகுதான் சூர்யா: வெற்றிமாறன் வெச்ச வரிசை, வெடித்துப் புலம்பும் சிவகுமார்

*    ஜனவரியில் எனது அடுத்த ரவுண்ட் பயணம் ஆரம்பமாகிறது! என்று சொல்லியிருந்தார் வைகைப்புயல் வடிவேலு. இந்த சமயத்தில், வடிவேலுவை சந்தித்திருக்கிறார் பார்த்திபன். அந்த போட்டோவை ட்விட் பண்ணியிருக்கிறார். அநேகமாக இந்த நக்கல் மன்னர்களின் ஜோடி அடுத்த சீசனை துவங்கலாம் என்றே தெரிகிறது. 
(வயிறுகள் ஜாக்கிரதை)

*    தமிழ் சினிமா உலகத்தை தன் பப்ளி உருவத்தில் நெடும் காலம் தெறிக்கவிட்டவர் குஷ்பு. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவுக்குள் வருகிறார். அதுவும் ரஜினியின் படத்தில் ஜோடியாகி இருக்கிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையில் இருந்து ‘தலைவர் 168’ பட ஷூட்டில் கலந்து கொள்ள துவங்கிவிட்டார் குஷ். இது குறித்து தனது ட்விட்டரில் ‘ரஜினி படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார். 
(கடவுளே! கடவுளே!)

*    சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் சரவணன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை அணுகியிருக்கின்றனர். அவர் கண்டுக்கவில்லையாம். உடனே சென்னையில் ’இறைவி’ எனும் பெயரில் கார்மெண்ட்ஸ் பிஸ்னஸ் பண்ணும் விஜய்சேதுபதியின் சகோதரி மூலம் சிபாரிசுக்கு போனதாம் தயாரிப்பு டீம். இன்னும் பச்சைக்கொடி கண்ணில் தெரியவில்லையாம். 
(நடிக்கிறேன்னா நடிக்கிறேன்னு சொல்லு! நடிக்கலேன்னாலும் நடிக்கிறேன்னு சொல்லு)

*    ஒரேயொரு வெற்றி கிடைச்சுட்டா போதும், என் மூத்த மகன் மறுபடியும் பொழச்சுப்பான்! என்று வெளியே சொல்லாத குறையாக சூர்யாவின் தோல்வியை பார்த்துப் புலம்பிக் கொண்டிருக்கிறார் சிவகுமார். இந்த நிலையில் அசுர வெற்றி இயக்குநர் வெற்றி மாறனுடன் சூர்யா இணையும் படம் உறுதியாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால், காமெடி நடிகர் சூரியை வைத்து வெற்றி இயக்கும் படத்தை முடித்துவிட்டுதான் சுர்யா படமாம். 
(நல்லா இருக்குங்க வரிசை)

*    இந்தியன் -2 படம் எந்த நேரத்தில் துவங்கியதோ தெரியவில்லை பிரச்னை பிரச்னை அப்படியொரு பிரச்னை. டிராப்பில் இருந்து மீண்டு, கிட்டத்தட்ட இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில் கால் அறுவை சிகிச்சைக்காக கமல் சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு வந்துவிட, ஷங்கர் தவியாய் தவிக்கிறாராம் படத்தை சொன்னபடி நகர்த்த முடியாமல். ஆதங்கம், ஆத்திரம் பொங்கினாலும் வெளியே காட்ட முடியாமல் கமலை குசலம் விசாரித்த படியே உள்ளாராம். 
(அன்பே சிவம்)
-    விஷ்ணுப்ரியா