உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று போராடித் தோற்றதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்குக்கு ட்விட்டர் பக்கத்தில் இரங்கற்பா ஒன்று எழுதியுள்ளார்.

நேற்று நடந்த அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.இந்தத் தோல்வி குறித்த பாஸிடிவ்,நெகடிவ் கமெண்டுகள் தான் இன்றைய வலைதளப் பதிவுகளின் ஹாட் டாபிக். அதில் முன்னணி நடிகர்களும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன்,...வெறும் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்திருந்த நிலையில் வேறு எந்த அணியும் அப்படி போராடியிருக்கமுடியாது...வரலாறு எப்போதும் உண்மையான போராளிகளை நினைவில் நிலைநிறுத்திக்கொண்டே இருக்கும். அந்த சாதனையை நேற்று ஜடேஜாவும் தோனியும் நேற்று நிகழ்த்தினார்கள். 

இன்னொரு பக்கம் தனிப்பட்ட முறையின் நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகனாக மாறிவிட்டேன். அஞ்சா நெஞ்சன் கேப்டன் கோலிக்கும் எனது வாழ்த்துகள்...என்று பதிவிட்டவர் தனது அடுத்த இன்னொரு பதிவில்,...ஆனால் எப்போதுமே எனக்கு தலைவர் தோனிதான்,...என்று பதிவிட்டுள்ளார். அதன் கீழுள்ள கமெண்ட் ஒன்றில்,...என்ன ப்ரோ. இந்த உலகம் ஜெயிக்கிறேன்னு சொன்னா கேக்காது. ஜெயிச்சவன் சொன்னாதான் கேக்கும். நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு வந்து பேசுன்னு சொன்னீங்க. இப்ப மாத்தி மாத்தி பேசுறீங்க,... என்று அவரது ‘கனா’பட வசனத்தைப்போட்டு கிண்டலடித்துள்ளார்.