தமிழில் பல எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளைக் கொடுத்து பிரபலமானது விஜய் தொலைக்காட்சி.  இதில் ஒளிபரப்பப்படும் ஆடல், பாடல், காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என அனைத்துமே டி.ஆர்.பி-யிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி ஏகபோக வரவேற்பை பெற்று விடுகிறது. அப்படி  தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் அடித்துள்ள நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. 

 

இதையும் படிங்க: முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!

வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற “குக் வித் கோமாளி” முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலக்கி வருகின்றனர். 

அதிலும் பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, புகழின் அட்ராசிட்டிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த சீசனில் அவ்வப்போது ஆர்.ஜே.பாலாஜி, வாணி போஜன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளார். 

 

இதையும் படிங்க: சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் பதில் என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் விஜேவாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலாவை பிராங் வீடியோ என கலாய்க்கும் சிவகார்த்திகேயன், எனக்கு ஷிவாங்கி போல ஒரு தங்கை இல்லையே என ஒவ்வொரு முறை இந்த ஷோ பார்க்கும் போதும் தோணும் என உருக்கமாக பேசி கோமாளிகளை கலகலப்பாக்கியுள்ளார். இதோ அந்த வீடியோ....