இரண்டாம் வாரத்திலும் அசத்தும் மாவீரன்.. சிவகார்த்திகேயன் மாவீரனாக உருவானது எப்படி? வைரலாகும் வீடியோ!
சிவகார்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியான நிலையில், அதன் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகின்றது.
தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் சிறந்து விளங்கி, இன்று திரைத் துறையிலும் ஒரு மாபெரும் நடிகராக வலம் வரும் ஒரு முரண்பாட்டு மூட்டை நான் சிவகார்த்திகேயன். தனது சொந்த ஊரில் இருந்து சினிமா கனவோடு புறப்பட்ட அவருக்கு சென்னை ஆரம்ப காலத்தில் பல சோதனைகளை முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
அவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, அதில் வென்று அடுத்த நிலைக்கு முன்னேறினார். அதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்த அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னைத்தானே அப்கிரேட் செய்து கொண்டார். இன்றளவும் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு என்றால் அது மிகையல்ல.
தயாரிப்பாளர்- விநியோகஸ்தராக தடம் பதித்த... ஜே எஸ் கே சதீஷ்குமார் நடிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்!
அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி, அதன் பிறகு நாயகனாக உருமாறி, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன். சில தினங்களுக்கு முன்பு இவருடைய மாவீரன் திரைப்படம் உலக அளவில் வெளியானது.
யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற சிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின், இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரபல நடிகை அதிதி சங்கர், மூத்த தமிழ் நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கூடுதல் சிறப்பாக குரல் வழி இணைந்திருந்தார் மக்கள் செல்வன்.
இந்த படம் வெளியான முதல் வாரமே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டான நிலையில், இரண்டாவது வாரத்திலும் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்து வருகிறது சிவகார்த்திகேயனின் மாவீரன். ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது பயணத்தை துவங்கி, இன்று மாஸ் காட்டும் மாவீரனாக அவர் உருவெடுத்துள்ளது உண்மையியல் சினிமாவை நேசிக்கும் பலருக்கு ஒரு பூஸ்ட் தான்.
நடிகை ரேகா லெஸ்பியனா? பெண் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்தார்.! சுயசரிதையால் வெடித்த சர்ச்சை!