தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு சரியாக அமையவில்லை. “ரெமோ”, “சீம ராஜா”, “வேலைக்காரன்”, “மிஸ்டர் லோக்கல்” என்று சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொடுக்கவில்லை. தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டியராஜன் கைகொடுத்தார். 

இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிய “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். பாண்டியராஜனின்  அசத்தலான திரைக்கதையும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பும் மார்க்கெட்டிங் யுக்தியும் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியது. இதையடுத்து இரும்பு திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த “ஹீரோ” திரைப்படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சூப்பர் ஹீரோ கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. 

இதையும் படிங்க: தூங்கி எழுந்ததும் இவ்வளவு கவர்ச்சியா?... டீப் நெக் ஓபனில் அட்ராசிட்டி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...!

எப்படியாவது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் உள்ள சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில், 'டாக்டர்' , 'அயலான்' என இரு படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. கோலமாவு கோகில பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார்  டாக்டர் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 'கேங் லீடர்' பட புகழ் பிரியங்கா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

இந்த படத்தில் படப்பிடிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், “டாக்டர்” படம் குறித்து சூப்பர் தகவல் ஒன்றை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உலவவிட்டுள்ளனர். மீண்டும் அரசு7 ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கும் பட்சத்தில் கோவாவில் உள்ள சில இடங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நவம்பரில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டால் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று “டாக்டர்” படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.