ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட இயக்குநரின் இயக்கத்தில் நடித்து வந்தார். சிவகார்த்திகேயனின் 14வது படமான அப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆரம்பத்தில் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்த நிலையில், கடும் நிதி நெருக்கடியால் படத்தை கைவிடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் கைகொடுக்க முன் வந்தது. தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தயாரித்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ், அதனைத் தொடர்ந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது. 

இதையும் படிங்க: தமிழ்நாடுய்யா இது... ரஜினியை ஆள அனுமதிக்க முடியாது... ஆவேசமாக கர்ஜிக்கும் இயக்குநர் பாரதிராஜா..!

இதனிடையே, அறிவியல் சார்ந்த படமான இதற்கு அயலான் என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த படி இன்று மாலை 5 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

மோஷன் போஸ்டர் முறையில் வெளியாகியுள்ள சிவகார்த்திகேயன் பட போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஏலியன் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு படம் தயாராவது உறுதியாகியுள்ளதால் செம்ம ஹாப்பி மூடில் உள்ள எஸ்.கே. புள்ளிங்கோ #Ayalaan என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.