தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து வருகிறார். குறிப்பாக பலரை தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். அதே போல் திரைத்துறையை சேர்ந்த, நலிந்த கலைஞர்கள் கஷ்டத்திற்கு ஓடி சென்று உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து,  வண்டலூர் பூங்காவில் உள்ள அனு என்கிற வெள்ளை புலியை தத்தெடுத்து அதன் செலவை ஏற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் அந்த புலியை தத்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக விலங்குகள் வசித்து வரும் பூங்காவாக உள்ளது இந்த வண்டலூர் பூங்கா.  இங்கு விலங்குகளை மக்கள் வந்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல், விலங்குகளை கவனித்துக்கொள்ள அதுக்கு தேவையான செலவுகளை அவர்கள் ஏற்று வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அனு என்கிற புலியை தத்தெடுத்து அந்த புலியின் அனைத்து செலவையும் ஏற்று வருகிறார். இந்நிலையில் மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது மே 2020  முதல் தத்தெடுத்துள்ளார்.

இந்த வண்டலூர் பூங்காவில் மொத்தம் 14 வெள்ளைப் புலிகள் உள்ளது. அந்த புலிகளை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தத்தெடுத்து அவற்றுக்கான செலவை ஏற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.