அட்லீ இயக்கும் அனைத்து படங்களும் காப்பி பெஸ்ட் வகையாறக்கள் தான் என்ற கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. இந்த நிலையில் 'பிகில்' படத்தில் விஜய் பேசிய வசனம் ஒன்று அதை உறுதிபடுத்தியிருக்கு. பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் கடந்து வெளியான 'பிகில்' திரைப்படம் மாஸ் காட்டி இருக்கிறதா என்னதான் விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், படம்  நல்லா இல்லங்கிற மாதிரியான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிட்டு இருக்கு. 'பிகில்' படத்தில் நிறைய காட்சிகள் ரிப்பீட்டா இருக்குறதாவும், நாயகன், கொம்பன் போன்ற பல படங்களின் கதை கதம்பம்னும் படம் பார்த்தவங்க சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துக்கிட்டு இருக்காங்க.

ஏற்கெனவே காப்பி பெஸ்ட் இயக்குநருனு பெயர் எடுத்த அட்லீ, 'பிகில்' படத்தில் வரும் காட்சிகளை  பல படங்களில் இருந்து காப்பி அடிச்சதா சர்ச்சைகள் எழுந்திருக்கு. இதுபோதாதுன்னு, படத்தின் காட்சிகள் எந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதுன்னு, வீடியோ ஆதாரங்கள் மூலம் நெட்டிசன்கள் நிரூபிச்சிக்கிட்டு வர்றாங்க. அதன் தொடர்ச்சியாக, 'பிகில்' படத்தில் விஜய் பேசும் மாஸ் டைலாக், பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசினதுன்னுங்கிற சர்ச்சை கிளம்பி இருக்கு. 

விஜய் டி.வி. பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், "நாம நம்ம வெற்றிக்காகத்தான் உழைக்கனுமோ தவிர, அடுத்தவங்கள தோற்கடிக்கிறதுக்காக உழைக்க கூடாதுன்னு" பேசி இருப்பாரு. அதை காப்பியடிச்ச அட்லீ, "நாம எப்பவுமே ஜெயிக்கிறதுக்காக விளையாடனும், அடுத்தவங்கள தோற்கடிக்குறதுக்காக விளையாடக்கூடாதுன்னு" யூஸ் பண்ணியிருக்காரு. 

 

இந்த இரண்டு வீடியோவையும் வச்சி மீம்ஸ் தயாரிச்சி இருக்குற சிவகார்த்திகேயன் ரசிகர்கள், இனி எஸ்.கே. அண்ணன் பட அப்டேட் வரும் போது காப்பிடான்னு, விஜய் பாய்ஸ் கதற மாட்டாங்கன்னு பங்கமா கலாய்ச்சியிருக்காங்க. சோசியல் மீடியாவில வைரலாகிட்டு வர இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், வசனத்தை கூடவா காப்பி அடிப்பாருன்னு, அட்லீ மேல செம கடுப்புல இருக்காங்க.