தென்னிந்திய நடிகர்கள், உச்ச கட்ட நட்சத்திரமாக மாறிய பின் அரசியலுக்கு வருவது புதிதல்ல, அந்த வகையில் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று, எம்எல்ஏ, பின்னர் எம்.பி மத்திய அமைச்சர் என பதவி வகித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

தற்போது அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் சகோதரர், பவன் கல்யாண் ஜன சேனா என்ற கட்சியை ஆரம்பித்து, தற்போது நடைபெற உள்ள ஆந்திரா சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலையும் சந்திக்க உள்ளார். 

இதனால் வரும் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக, சகோதரருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவெடுத்துள்ளாராம். பலர் அவரிடம் பிரச்சாரம் செய்ய கூறி கேட்டு கொண்ட போதிலும், முடியவே முடியாது என தேர்தல் முடியும் வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிரடி முடிவையும் எடுத்துள்ளாராம். எனினும் சிரஞ்சீவி குடும்பத்தில் பல ஹீரோக்கள் உள்ளதால் அவர்கள் கண்டிப்பாக பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.