கால்ஷீட் சொதப்பல்களில் இருந்து மீண்டு வந்த சிம்பு, மீண்டும் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சிகளை எல்லாம் செய்து செம்ம ஸ்மார்ட் லுக்கிற்கு மாறினார். சிம்பு ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸை காண அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். 

மாநாடு பட ஷூட்டிங்கிற்கு முன்னதாக தனது முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் சேர்ந்து மஹா பட ஷூட்டிங்கில் பங்கேற்ற வீடியோ  மற்றும் புகைப்படங்கள் செம்ம வைரலானது. சிம்பு ரசிகர்களின் சந்தோஷம் கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த கொரோனா விவகாரத்தால் “மாநாடு” படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

தற்போது தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 30ம் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது வீட்டிலேயே முடங்கியுள்ள சிம்பு, “மாநாடு” படத்திற்காக செய்து வந்த உடற்பயிற்சியை கைவிடுவதாக இல்லை. வீட்டிற்குள் இருப்பதால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடை கூட ஆரம்பித்துவிட்டால், “மாநாடு” ஷூட்டிங்கிற்கு திரும்பும் போது குண்டாகிவிடுவார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் சிம்புவை வச்சி செய்ய நெட்டிசன்கள் தயாராக இருக்கின்றனர். இதை நன்றாக புரிந்து கொண்ட சிம்பு வீட்டிலேயே ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்துவிட்டார். 

இதையும் படிங்க: வெறியாட்டம் ஆடும் கொரோனா... மகனை நினைத்து பரிதவிக்கும் தளபதி விஜய்...!

வீட்டை சுற்றிலும் வியர்க்க விறுவிறுக்க சிம்பு ஜாகிங் செய்யும் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் போதே உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும் என்ற வெறித்தனம் சிம்புவிடம் இருப்பதை காண முடிகிறது. இதோ அந்த வீடியோ....