பிரபல நடிகர் சிம்பு (simbu) தற்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகர் சிம்பு தற்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடிக்க துவங்கி, சிறிய வயதிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். பின்னர் ஹீரோவாக மாறிய பின்னர், ஆக்ஷன், காதல், காமெடி என நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளதோடு, தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வவருகிறார்.

மேலும் செய்திகள்: Gabriella: குச்சி ஐஸ் போல் இருந்த பிக்பாஸ் கேபியா இது? குட்டி நமீதா போல் சும்மா கும்முனு மாறி கொடுத்த போஸ்!

நடிகர் சிம்புவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இவரை பற்றி குறையாக அடுக்கி வந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மூக்கில் மீது விரல் வைக்கும் அளவுக்கு, ஆள் மட்டும் மாறாமல் தன்னையே ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டு சர்ச்சைகைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார்.

மேலும் செய்திகள்: Katrina Kaif Haldi: முகம் முழுக்க மஞ்சள் பூசி.. ரொமான்ஸ் குறையாத விக்கி - கத்ரீனா ஹல்தி கொண்டாட்டம்! போட்டோஸ்!

இவரது டெடிகேஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக அமைத்தது என்றால் அது மாநாடு படத்தின் வெற்றி என கூறலாம். கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு அறிக்கை மூலம் ரசிகர்களுக்கும், பத்திரியாகையாளர்கள், மற்றும் படக்குழு உள்ளிட்ட அனைவருக்குமே தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: Roja Serial: 'ரோஜா' சீரியல் பிரபலத்திற்கு குவா... குவா..! குழந்தையின் கியூட் புகைப்படத்தோடு தெரிவித்த ஷாமிலி!

தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும், 'வெந்து தணிந்த காடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், காச்சல் காரணமாக சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Roja Serial: 'ரோஜா' சீரியல் பிரபலத்திற்கு குவா... குவா..! குழந்தையின் கியூட் புகைப்படத்தோடு தெரிவித்த ஷாமிலி!

இந்த தகவல் சிம்புவின் ரசிகர்கள் மட்டும் இன்றி, திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்... விரைவில் சிம்பு நல்ல உடல் நலத்துடன் மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.