Asianet News TamilAsianet News Tamil

எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம்... இறப்பின் கதறல்...ரசிகர்களுக்கு நடிகர் சிம்புவின் உருக்கமான கோரிக்கை!

இந்நிலையில் நடிகர் சிம்பு சுஷாந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், தமிழக மக்களை பாடாய் படுத்தும் கொரோனா வைரஸை கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 

Actor Simbu Release Official Statement on Sushant Singh Rajput death and corona pandemic
Author
Chennai, First Published Jun 18, 2020, 2:11 PM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் இவ்வளவு சீக்கிரமாக தனது வாழ்நாளை முடித்துக்கொள்வார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சினிமா ரசிகர்களையும், ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் சுஷாந்த் மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு சுஷாந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், தமிழக மக்களை பாடாய் படுத்தும் கொரோனா வைரஸை கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

Actor Simbu Release Official Statement on Sushant Singh Rajput death and corona pandemic

 

உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள். 

மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன... டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். 

எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.  இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும். 

இதையும் படிங்க: 39 வயசில் இது தேவையா?... ஓவராக கவர்ச்சி காட்டிய கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!


இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே. 


இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம். பேனிக் (Panic) ஆவதுதான் மிகப்பெரிய நோய். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சுனாமி, கஜா புயல், என எத்தனையோ இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வெற்றி கண்டோம். நிறைய பேரின் வீடுகள் ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின. மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம். இந்தக் கொரானா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது.

இதையும் படிங்க: சுஷாந்த் மரணத்தால் சிக்கலில் மாட்டிய சோனம் கபூர்...பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களால் எடுத்த அதிரடி முடிவு!


நேரடியாக உதவி செய்ய முடியாது. ஆனால் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லுங்கள். கிளவுஸ், முகக் கவசம் அணிந்து சமூகத்தில் பரவியுள்ள இந்தக் கொரானாவை இல்லாத நிலையை உருவாக்குவோம். மனதளவில் தளர்ந்து போய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள். 


மனபலம் கொண்டு கொரானாவை விரட்டுவோம். (இம்யூன் பவரை) நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது முக்கியம். நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு. எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலெடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை. 

இதையும் படிங்க: “போங்கடா கிறுக்கு கதாநாயகனுங்களா?”... பாலிவுட்டின் டாப் ஸ்டார்களை ஓபன் மேடையில் திட்டிய மாதவன்..வைரல் வீடியோ!

 

செய்வோம். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம், உங்களுடன் எப்போதும் தோள் நிற்கும் உங்கள் சிலம்பரசன் TR  என்று எழுதியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios