தமிழ் ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழில் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இடையில் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த மாதன் முழுக்க இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். “இறுதிச்சுற்று” படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவன், தற்போது தமிழில் முழுகவனம் செலுத்தி வருகிறார். அதன்பின்னர் விஜய் சேதுபதி, மாதவன் காம்பினேஷனில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அனுஷ்காவுடன் “நிசாப்தம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசனின் அதிரடி கவர்ச்சி... ஆங்கில மேகஸின்களுக்காக எப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க!

ஓவராக அலட்டாமல் அசராமல் நடிக்கும் மாதவனுக்கு என்று கோலிவுட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் மாதவனுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தி திரையுலகின் ஜாம்பவான்களான சைஃப் அலிகான், ஷாருக்கானை மாதவன் கலாய்த்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க:39 வயசில் இது தேவையா?... ஓவராக கவர்ச்சி காட்டிய கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

சமீபத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சுஷாந்த் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாகவும், புதிதாக வருபவர்களை அவர்கள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் பாலிவுட் டாப் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோர் வளர்ந்து வரும் கலைஞர்களை முளையிலேயே கிள்ளி எரிய நினைப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க:  சுஷாந்த் மரணத்தால் சிக்கலில் மாட்டிய சோனம் கபூர்...பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களால் எடுத்த அதிரடி முடிவு!

இந்நிலையில் பாலிவுட்டில் நடைபெற்ற பிலிம் பேர் விருது வழங்கு விழாவில் பங்கேற்ற மாதவனிடம் ஷாருக்கான், சைஃப் அலிகான் ஆகியோர் யாரையாவது தமிழில் திட்டும் படி கேட்க, போங்கடா கிறுக்கு கதாநாயகர்களா? என்று திட்டியுள்ளார். அரங்கம் முழுவதும் சிரிப்பலையை வரவழைத்த அந்த வீடியோ தற்போது ஷாருக்கானை ட்ரோல் செய்யும் விதமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.