ஏற்கனவே நடந்த 'மாநாடு' படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாத நிலையில், அண்மையில் மீண்டும் இந்த படத்தின் வெற்றிவிழா நடைபெறும் என சிம்பு அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் வெற்றிவிழா தள்ளிவைக்கப்படுவதாக அறிக்கை வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே நடந்த 'மாநாடு' படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாத நிலையில், அண்மையில் மீண்டும் இந்த படத்தின் வெற்றிவிழா நடைபெறும் என சிம்பு அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் வெற்றிவிழா தள்ளிவைக்கப்படுவதாக அறிக்கை வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது அனைவரும் அறிந்ததே.

மேலும் செய்திகள்: AR Rahman Daughter Khatija : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு திருமணம் - மாப்ள யார் தெரியுமா?

இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. இயக்குனர் வெட்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படத்தின் வெற்றிவிழாவை கடந்த மாதம் படக்குழு மிக பிரமாண்டமாக கொண்டாடியது. ஆனால் இதில் சிம்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது என படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் கொடுத்தனர். சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளாதது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது.

மேலும் செய்திகள்: Kajal Aggarwal: கர்ப்பமாக இருந்தாலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத காஜல்? ஜொலிக்கும் உடையில் செம்ம ஹாட் போஸ்!

எனவே ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக மீண்டும் ஒரு வெற்றிவிழாவை நடத்த சிம்பு திட்டமிட்டார். அதன்படி ஜனவரி மாதம் 6-ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெற இருந்த நிலையில், இந்த விழாவில் சிம்புவின் ரசிகர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 'மாநாடு' படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது, சிம்புவின், அகில இந்திய தலைமை மன்றத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Kajal Aggarwal: கர்ப்பமாக இருக்கும் காஜல்... பொழியும் வாழ்த்து மழை! சூப்பர் தகவலை வெளியிட்டது யார் தெரியுமா?

இதில், ஜனவரி 6 ஆம் தேதி நடக்க இருந்த, 'மாநாடு' படத்தின் வெற்றி விழா ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், ரசிகர்களின் நலன் கருதி 'மாநாடு' படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும், விரைவில் விழா நடக்கும் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…