Asianet News TamilAsianet News Tamil

Simbu: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சிம்புவின் தற்போதைய நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

பிரபல நடிகர் சிம்பு (simbu) உடல்நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவரது உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Actor simbu latest health conditon update
Author
Chennai, First Published Dec 12, 2021, 12:10 PM IST

பிரபல நடிகர் சிம்பு (simbu) உடல்நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவரது உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனரும்  தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின்( T Rajendhar son) மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடிக்க துவங்கி, சிறிய வயதிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். பின்னர் ஹீரோவாக மாறிய பின்னர், ஆக்ஷன், காதல், காமெடி என நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளதோடு,  தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வவருகிறார்.

மேலும் செய்திகள்: Rajnikanth birthday special: சூப்பர் ஸ்டார் ஏன் 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' என்று அழைக்கப்படுகிறார் தெரியமா?

 

Actor simbu latest health conditon update

நடிகர் சிம்புவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இவரை பற்றி குறையாக அடுக்கி வந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மூக்கில் மீது விரல் வைக்கும் அளவுக்கு, ஆள் மட்டும் மாறாமல் தன்னையே ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டு சர்ச்சைகைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார்.

மேலும் செய்திகள்: Actor Jai: 3 வருடத்திற்கு பின் கார் ரேஸில் களம் இறங்கி மாஸ் காட்டும் நடிகர் ஜெய்..!

இவரது டெடிகேஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக அமைத்தது என்றால் அது 'மாநாடு' (Maanaadu) படத்தின் வெற்றி என கூறலாம். கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் (goutham Menon) வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா'  (Vinnai thaandi Varuvaayaa) படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு,  மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு அறிக்கை மூலம் ரசிகர்களுக்கும், பத்திரியாகையாளர்கள், மற்றும் படக்குழு உள்ளிட்ட அனைவருக்குமே தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார்.

Actor simbu latest health conditon update

தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும், 'வெந்து தணிந்த காடு' (Venthu thanintha Kaadu) படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், காச்சல் காரணமாக சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என வந்துள்ளதாக நேற்றைய தினமே கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: இயக்குனர் ஷங்கர் மகனா இது? கையில் பிளாக் பேன்டு.. கழுத்தில் சில்வர் செயின் என இளம் வயசு சிம்பு போலவே இருக்காரே

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இவரது தற்போதைய உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவலில், வைரஸ் காச்சல் (Virus Fever) காரணமாகவே சிம்பு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் சிகிச்சைக்கு பின்னர், தற்போது அவர் மெல்ல மெல்ல காச்சலில் இருந்து மீண்டும் உடல்நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிம்பு விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios