Actor Jai: 3 வருடத்திற்கு பின் கார் ரேஸில் களம் இறங்கி மாஸ் காட்டும் நடிகர் ஜெய்..!
தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க போராடி வரும் ஜெய் (Jai), நடிகர் அஜித்தை போலவே... மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது. தற்போது இவர் விரைவில், ஃபார்முலா ஃபோர் கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெய் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் கொண்டுள்ளது மட்டும் இன்றி , விதவிதமான சார் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கார் ரேஸில் கலந்து கொள்ளும் இவர் தற்போது சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெற உள்ளது. இந்த ரேஸ் போட்டி, டிசம்பர் 10 ஆம் தேதி முதல் துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஜெய் 6 ஆம் நம்பர் எண் கொண்ட காரில் தான் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த போட்டி வழக்கமாக, இந்தியா முழுவதும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று தடங்களில் மட்டுமே போட்டிகள் நடப்பது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு, போட்டி சென்னை மைதானத்தில் (MMRT – Madras Motor Racing Track) நடக்க இருப்பதால், சென்னை மக்கள் இப்போட்டியை கண்டு கழிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பல கார் ரேஸ் போட்டிகளில் ஜெய் கலந்து கொண்டிருந்தாலும், தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கி ரசிகர்களை மெர்சலாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு பங்கேற்பதற்காக இரண்டு திரைப்பட குழு ஸ்பான்சர் செய்துள்ளது. ஜெய்யின் நடிப்பு மீது நம்பிக்கை வைப்பதை தாண்டி, அவரது திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து ஸ்பான்சர் செய்து வருவது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித்தை தொடர்ந்து கார் ரேஸ் போட்டியில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் ஜெய், இந்த போட்டியில் வெற்றி பெற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.