நடிகை ஹன்சிகா தமிழில் இறுதியாக பிரபுதேவாவுடன் நடித்த குலேபகாவலி திரைப்படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த ஹன்சிகா, எப்படியாவது ஹிட்டு கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இருப்பினும், முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் மஹா.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடையில், சுருட்டு பிடிப்பது போல் ஹன்சிகா இருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.இதை தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த படத்தில், ஹன்சிகா காதலித்து பிரேக் அப் செய்த நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

சமீபத்தில் கூட சிம்பு, ஹன்சிகா மீது படுத்து கொண்டிருப்பது போல், ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அதேசமயத்தில் 2018ம் ஆண்டு மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு, அதன் பிறகு எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். 

இதையும் படிங்க: லுங்கி, பனியனில் கையில் வாளுடன் செம்ம டெரர் காட்டும் தனுஷ்... தரமான சம்பவம் காத்திருக்கு....!

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு, ஹன்சிகாவின் மஹா பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். அந்த படத்தில் செம்ம ஸ்டைலிஷ் ஆன பைல கெட்டப்பில் நடித்து மிரட்டியுள்ளார் சிம்பு. படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 


அதிலும் குறிப்பாக பைலட் உடையில் இருக்கும் சிம்பு, ஹன்சிகாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, அவசரமாக ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.