நடிகர் சிம்பு "அப்படி இப்படி" என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பேட் இமேஜ் கருத்துகளில் துளியளவும் உண்மை இல்லை என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

"ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும்  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். மதுர மைக்கேல், அஷ்வின் தாத்தா உள்பட 4 வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிம்பு கட்டம் கட்டி கலக்கி வருகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படம் குறித்தும், நடிகர் சிம்பு குறித்தும் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்." 

"திரைப்படத்திற்காக ஒரு நடிகர் உடல் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதானதல்ல. கமல், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு அது கைவந்த கலை.. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் எடையை பாதியாக குறைப்பது என்பது சிம்பு விசயத்தில் சிரமம்."

"சிம்புவா1 அவர் அப்படி, இப்படி என்று பலரும் அவர் குறித்து தன்னிடம் மோசமான விசயங்களை தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அவர் சொக்கத் தங்கம். அவருடன் பணியாற்றுவது மிக எளிது. அஷ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கு அவர் மூன்று மணி நேரம் ஒப்பனை செய்திருந்தார்."