சபரி மலையில் இருந்து திரும்பிய கையோடு மாநாடு படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு தீவிர பாக்சிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ டுவிட்டரில்  வைரலாகி வருகிறது . வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது  இப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில் சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் படத்திலிருந்தே சிம்புவை நீக்குவதாக படக்குழு அறிவித்தது. 

இதை அதிகாரப்பூர்வமாக  சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.  அதாவது ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் உடன் சேர்ந்து முதல்கட்ட ஷூட்டிங் மட்டும் நடித்துவிட்டு அதன்பிறகு சூட்டிங்கிற்குச்  செல்வதையும் தவிர்த்திருக்கிறார்,  இதன்பின்னர் தயாரிப்பாளர்களை வைத்து சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதற்கிடையே சிம்புவுக்கும் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது .இந்நிலையில்  திடீரென 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருந்த சிம்பு தலையில் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு சென்ற புகைப்படமும் இணையத்தில் வைரலானது. 

சபரிமலைக்கு  இருமுடி கட்டி கிளம்பிய அவருடன்  அவரது தந்தை டி. ராஜேந்திரன் உடனிருந்தார் . அதற்கான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது .  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் சிம்பு சபரிமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார் .  அதனையடுத்து மாநாடு படத்திற்காக பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்  அவரின் வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது .