வந்தான் ஜெயிச்சான் ரிப்பீட்டு... மீண்டும் திரையரங்கில் ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட போகும் சிம்புவின் 'மாநாடு'..!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வருடத்தின் இறுதியில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மீண்டும் திரையரங்கில் ரிலீசாக உள்ளதை சிம்புவின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
பல வருடம் ஒரே ஒரு வெற்றி படத்திற்காக காத்திருந்த சிம்புவுக்கு, 'மாநாடு' திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெளியான இந்த படம், வெளியான பின்பும் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
மேலும் செய்திகள்: இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
இந்த படத்தில் சிலம்பரசனுடன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஞ்சேனா கீர்த்தி போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. ஒரே ஒரு பாடல் இடம்பெற்றாலும் அது தரமான பாடலாக அமைந்தது. மேலும் ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படத்திற்கு, பிரவீன் கே. எல் படத்தொகுப்பு செய்திருந்தார்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் சர்ச்சை நடிகை? எப்போது துவங்குகிறது நிகழ்ச்சி... பரபரப்பு தகவல்!
100 நாட்களுக்கு மேல் சிம்புவின் ரசிகர்கள் ஆதரவோடு திரையரங்கில் ஓடிய இந்த படம், சுமார் ரூ.117 கோடி காலெக்ட் செய்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் படம் வெளியாகி 5 மாதங்கள் ஆனபிறகு தெரிவித்திருந்தார். தற்போது இந்த படம் பிரபல திரையரங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, அறிவித்ததை தொடர்ந்து திரையரங்கம் குறித்த தகவலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு. 'மாநாடு' படத்திற்கான புக்கிங் துவங்கி விட்டதாகவும், இதில் போடப்பட்டுள்ளது. இந்த தகவலை தற்போது சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.