கூகுள், யு-டியூப், டுவிட்டர் என அனைத்திலும் கடந்த ஒருவாரமாக ட்ரெண்டிங்கில் இருப்பது சாமியார் நித்தியானந்தா தான். கைலாசா என்ற தனித்தீவை உருவாக்க உள்ளதாக நித்தியானந்தா குறித்து உருவான புதிய சர்ச்சை, தீயாய் கொளுந்துவிட்டு எரிகிறது. குறிப்பாக நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது நித்தி, ஆண் பக்தர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தற்போது சர்ச்சை நாயகன் நித்தியானந்தா முன்பு பிரதமர், தலைவணங்கி நிற்பது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 சோசியல் மீடியாவில் ஆக்ட்டீவாக இருக்கும் நடிகர் சித்தார். மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் குறித்தும் தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நித்தியானந்தாவை பிரதமர் மோடி சந்திக்கும் புகைப்படம் குறித்து சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தார்த், நித்தியானந்தா ஒரு கோமாளி, ஏமாற்று பேர்வழி, கிரிமினல். அப்படிப்பட்ட நித்தியானந்தா முன்பு, தலைவணங்குவது யாராக இருந்தாலும், அவர்களது தலையை பரிசோதிக்க வேண்டும்  என அதிரடியாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் சித்தார்த், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி பிரதமரை விமர்சித்துள்ளது பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.