தெலுங்கு ரீமேக்கில் தமிழ் ஹீரோக்கள் நடிப்பதும், தமிழ் படங்களின் ரீமேக்கில் டோலிவுட் ஸ்டார்கள் நடிப்பதும் காலம், காலமாக நடக்கும் வழக்கம் தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம், விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மாவாக மாறியது. அதேபோல தமிழில் தனுஷ் நடித்த அசுரன் பட ரீமேக்கில் வெங்கடேஷும், அஜித்தின் சூப்பர் ஹிட் படமான நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் பவன் கல்யாணும் நடிக்க உள்ளனர். 

இந்நிலையில் #TeluguRealHeroes என்ற ஹேஷ்டேக்கில் தெலுங்கு ஹீரோக்கள் தான் சூப்பர், கோலிவுட் ஹீரோக்கள் எல்லாம் வேஸ்ட் என்பது போல் சோசியல் மீடியாவில் நேற்று முதல் தெலுங்கு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் பொங்கி எழுந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் ஆகியோரது ரசிகர்கள் பதிலுக்கு ஒரு ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து டோலிவுட் ஹீரோக்களை மரண கலாய், கலாய்த்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் தெலுங்கு நடிகர்களின் பட போஸ்டர்கள், போஸ்கள், முக்கியமாக அவர்களது கலர், கலர் காஸ்ட்யூம்களை கிண்டல் அடித்து தமிழ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மோதிக் கொள்வதை பார்த்து நடிகர் சித்தார்த்தை கடுப்பாகியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் தேவையற்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருவதை பார்த்த சித்தார், "பைத்தியம் சேலஞ்ச், தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள். இன்டர்நெட் வீணடிக்கப்படுகிறது" என்று விமர்சித்துள்ளார். 

இளைஞர்களின் சக்தி தேவையற்ற விஷயங்களில் வீணாடிக்கப்படுவதாக சித்தார்த் வேதனை தெரிவித்துள்ள நிலையில், அவரது டுவிட்டர் பதிவிலும் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.