Shivaraj Kumar: ரகுவரன் தம்பிக்கு சினிமா வாய்ப்பு! வாக்கு கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.!
நடிகர் ரகுவரனின் சகோதரர், ரமேஷ்வரனுக்கு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், குரலாலும், ரசிகர்களை கவர்ந்தவர் ரகுவரன். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவர். குறிப்பாக வில்லன் என்றால், பெரிய மீசை, பாடி பில்டர் போல் உடல்கட்டு, என இருக்க வேண்டும் என்கிற செட்டப்பை உடைத்து, ரசிகர்களை ஸ்டைலிஷ் வில்லனாக மிரள வைத்தவர் ரகுவரன்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, தன்னுடைய 49 வயதில் உயிரிழந்த சம்பவம் தற்போது வரை பல ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. மேலும் சமீபத்தில் ரகுவரனின் தாயார் மற்றும் சகோதரர் ரமேஷ்வரன் ஆகியோர் கொடுத்த பேட்டிகள் சமூக வலைதளத்தில் அதிகம் கவனிக்கப்பட்டது.
இந்நிலையில் ரமேஷ்வரன் எதேர்ச்சியாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை சந்திக்க நேர்ந்த போது, அவரிடம் பேசிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது சிவராஜ் குமார் ராமேஸ்வரனிடம் ரகுவரனை போல தனித்துவமான நடிகரை பார்த்ததில்லை. அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என பேசியுள்ளார். அதே போல் ரமேஷ்வரனுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் 100% வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். ரகுவானினின் தம்பி ரமேஷ்வரன் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்த போதிலும், இதுவரை இவரால் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!
ராமேஸ்வரனுக்கு சிவராஜ்குமார் வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இவர் ரகுவரன் அளவுக்கு இல்லை என்றாலும்... ரசிகர்களால் கவனிக்கப்படும் அளவிற்காவது தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறைந்த நடிகர் ரகுவரன் பிரபல நடிகை ரோகினியை காதலித்த திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். திருமணமான சில வருடங்களில் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தாலும், தன்னுடைய மகனுக்கு செய்ய வேண்டிய அத்தனை பொறுப்புகளையும் தன்னுடைய கடமையில் இருந்து தவறாமல் செய்து வந்தார்.
திறமையான இந்த நடிகரின் மரணத்திற்கு அவருக்கு இருந்த குடிப்பழக்கம் ஒரு காரணம் என கூறப்பட்டாலும், அவருடைய அம்மாவும் - சகோதரரும், ரகுவரன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததும் முக்கிய காரணம் என சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்தனர். ரகுவரன் கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த போது தனுஷ் பார்ப்பதற்கு தன்னுடைய மகன் போலவே இருக்கிறார் என பலமுறை தன்னிடம் தெரிவித்ததாக அவருடைய அம்மா கூறி இருந்தார். மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரகுவரன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.