தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். அவருடைய கதை, திரைக்கதை பாணியை யாராலும் அவ்வளவு எளிதியில் கையாள முடியாது. அப்படிப்பட்ட கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ஊர்வசி கோவை சரளா, தீபா, ‘பசி’சத்யா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 

 

இதையும் படிங்க:  சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இந்த படத்தில் முக்கியமானதே அந்த முருங்கைகாய் சமாச்சாரம் தான். இதுபற்றி சமீபத்தில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் கூட சாந்தனு, அவருடைய அப்பாவிடம் கேள்வி கேட்க, “அந்த சீனை சும்மா எல்லாம் நான் படத்தில் வைக்கவில்லை என்றும், அறிவியல் பூர்வமாகவும் முருங்கைகாய் அந்த மாதிரி விஷயங்களுக்கு முக்கியமானது” என்றும் வெட்கம் கலந்த சிரிப்புடன் விளக்கம் கொடுத்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், சாந்தனு நடிக்க உள்ள புது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். 

 

இதையும் படிங்க: நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?.... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அழகில் மெருகேறிய போட்டோஸ்...!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க முயன்று வரும் நடிகர் சாந்தனு, மாஸ்டர் , ராவணக் கோட்டம் ஆகிய படங்களை எதிர்பார்த்து வருகிறார். அதைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்க உள்ள படத்திற்கு முருங்கைகாய் சிப்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜும் நடிக்க உள்ளாராம். 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

புதுமண தம்பதிகளின் முதலிரவில் நடக்கும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் விதம் கதை வடிவைக்கப்பட்டுள்ளதாம். முதலிரவு அறைக்குள் சாந்தனு, அதுல்யா அமர்ந்துள்ளது போல் வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அதுமட்டுமின்றி #MurungaikkaiChips என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் என்னடா இப்ப தான் அப்பாகிட்ட முருங்கைகாய் பற்றி சந்தேகம் கேட்டாரு, இப்ப அதை டெஸ்ட் பண்ண கிளம்பிட்டாரா? என கிண்டலடித்து வருகின்றனர்.