நடிகர் ஷாம் உட்பட 13 பேர், அடுக்கு மாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்த போலீசார் அவர்களை ஜாமில் விடுதலை செய்துள்ளனர்.

தமிழில், தளபதி விஜய் நடித்த 'குஷி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஷாம். பின்னர் 12பி , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்க்கை, உள்ளம் கேட்குமே, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்களும் உள்ளனர்.

தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம். மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2013 ஆண்டு வெளியான 6 மெழுகு வத்திகள் படத்தை தயாரித்து நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் ஷாம், அவருக்கு சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், அடிக்கடி பணம் வைத்து சீட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நேற்றிரவு, போலீசார் திடீர் என, நடிகர் ஷாமுக்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் ஷாம், அவருடைய லாயர், மற்றும் அறிமுக இயக்குனர் ஆனந்த் உட்பட 13 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து பணம், சீட்டு கட்டுகள், சூதாட்ட விடுதிகளில் பயன்படுத்தப்படும் டோக்கன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

அனைத்தையும் பறிமுதல் செய்ததோடு, போலீசார் 13 போரையும் நேற்றிரவு கைது செய்தனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் எச்சரித்து, சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.