தமிழக அமைச்சர்கள புறவாசல் வழியாக செல்ல நினைத்தால் அவர்களுக்கு வேலூர் ஜெயில்தான் என அதிமுக அம்மா அணி பொது செயலாளர் தினகரனை சந்தித்த நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் புறவாசல் வழியாக சென்றால் வேலூர் ஜெயிலுக்குத்தான் செல்லவேண்டும் என்றும் டிடிவி தினகரனை சந்தித்தபின் நடிகர் செந்தில் பேட்டியளித்தார்.

நடிகர் செந்தில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது என தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள் புற வாசல் வழியாக சென்றால் வேலூர் ஜெயிலுக்குத்தான் செல்லவேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அமைச்சர்களே இரண்டு, மூன்று பதவிகளில் இருக்கின்றனர் என்றும், அந்த பதவிகளை மற்ற எம்எல்ஏக்களுக்கு அவர்கள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் செந்தில் தெரிவித்தார்.

இப்போதுள்ள நிலைமையே இருந்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அவர் இந்தியர் என்றும் செந்தில்  கூறினார்..