இன்று தனது 45 வது அடியெடுத்துவைக்கும் நடிகர் சூர்யாவுக்கு வீடியோ பதிவின் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜ்,’உன்னுடை துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன் சூர்யா’என்று மனதார பாராட்டியுள்ளார்.

நடிகர் சூர்யாக்கு இன்று 45 வது பிறந்த நாள். இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ள நடிகர் சத்யராஜ்,,..சில கஷ்டங்கள் அதற்குள் சில இழப்புகள் இருக்கிறது. பல எதிர்ப்புகளை பல சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அதனால் நீ சமூக நீதிக்காகவும், கல்விக்காகவும் குரல் கொடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் நுனிப்புல்லை மேய்ந்தது போல மேலோட்டமாக எதுவும் சொல்லாமல், ஆழமாக இறங்கி ஆராய்ந்து சொல்ல வேண்டிய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறாய். இந்த பிறந்த நாளுக்கு உன்னை விட வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன். உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்’என்று தெரிவித்துள்ளார். சூர்யா மிக விரைவில் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் நடமாட ஆரம்பித்துள்ள நிலையில் அவ்வப்போது தீவிர அரசியல் கருத்துக்கள் கூரிவரும் நடிகர் சத்யராஜின் வாழ்த்து அந்த செய்திகளுக்கு கொம்பு சீவி விடுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.