நடிகர் கார்த்தி 'கைதி', படத்தைத் தொடர்ந்து தற்போது முழு முனைப்புடன் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தம்பி'. இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, 30ஆம் தேதி அன்று மிகவும் பிரபண்டமாக நடந்தது. இதில் கார்த்தி மற்றும் ஜோதிகாவிற்கு அப்பாவாக நடித்துள்ள சத்யராஜ் பேசும்போது, சிவகுமாரின் குடும்பம் தன்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருப்பதாக கூறி அதிரவைத்தார்.

பின் தொடர்ந்து பேசிய அவர், இந்த இரு விஷயங்களுக்காக சிவகுமாரின் குடும்பத்தை பார்த்து தான் பயப்படுவதாக தெரிவித்தார். அதாவது, சிவகுமார் போன்று நல்ல நடிகராக இருக்க முடியுமா? என்கிற பயமும் அவரை மாதிரி பிள்ளைகளை ஒழுக்கத்தோடு வளர்க்க முடியுமா? என்கிற பயமும் தன்னை போன்ற பலரை பயமுறுத்திக் கொண்டே இருப்பதாக சத்யராஜ் கூறினார்.

மேலும் பாகுபலி படத்திற்கு பின்,  'தம்பி' படத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக அனைத்து அம்சங்களும் உள்ள கதை அமைந்திருப்பதாக தெரிவித்த சத்யராஜ். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள 'பாபநாசம்' படத்தை, மலையாளம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் தான் பார்த்தவன் என்றும், இந்த படத்தை பார்த்தபின் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததாகவும், அது 'தம்பி' படத்தின் மூலம் நிறைவேறியதாக தெரிவித்துள்ளார்.