தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. அண்ணன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு பட ரீமேக்கான ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்த தன் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் ஜெயம் ரவி.  தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். ஆனால் ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் என்ற செய்தி புதியதாக உள்ளது.

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

தற்போது ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் மே 1ம் தேதி வெளியாக இருந்த பூமி படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஜெயம் படத்தில் தான் ரவி அறிமுகமானதாக நினைத்து கொண்டிருக்க, தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ளார். அப்படி ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தெலுங்கு படம் சமீபத்தில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. அந்த வீடியோவை காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் 
 ஜெயம்ரவி ப்ரோ, நீங்க ரொம்ப அழகு எனவும் வர்ணித்துள்ளார்.