தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வருபவர் நடிகர் சதீஷ்.

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய காமெடி பேச்சை எடுத்து விட்டு, ரசிகர்களை குஷி படுத்துவார். அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 168 ஆவது படத்திலும் நடிக்க உள்ளதாக டிசம்பர் 11 ஆம் தேதி அவருடைய திருமணம் அன்றே தெரிவித்தார்.

இதன் மூலம் தன்னுடைய 25 வருட கனவு தற்போது நினைவாகி விட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இவருக்கு  திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார்.

இதை பார்த்து  ரசிகர்கள் பலர் செம்ம ஷாக்காக, சதீஷுக்கு என்ன ஆனது என அவரிடமே கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். ஒரு வேலை படத்திற்காக உடல் எடையை குறைத்திருக்கலாம் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.

satheeshin தற்போதைய புகைப்படங்கள் இதோ...

View this post on Instagram

#SriRangam 🙏🏻🙏🏻🙏🏻

A post shared by Sathish (@actorsathish) on Jan 24, 2020 at 11:05pm PST