தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்பட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் உடல் நலக் குறைவினால் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது

அன்பான தாயை பிரிந்து வாடும் முதலமைச்சரின் வேதனையை உணர முடிகிறது. தாயின் மறைவு முதல்வருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

அம்மையார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்."