actor santhosh join mr.chanramouli movie team

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகம் கொடுத்து , 'தயம்', 'பயமா இருக்கு' ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சந்தோஷ். தற்பொழுது நடிகர் கார்த்திக், மற்றும் கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகவுள்ள ''மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில் , '' கார்த்திக் , கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன் , அகத்தியன்,சதிஷ், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு பெருமை. 

இந்தப் பட்டியலில் நடிகர் சந்தோஷ் சேர்ந்துள்ளார். பல ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கவுள்ளதில் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருடையது” என்று கூறினார்.

சந்தோஷ் கதாநாயகனாக அறிமுகமான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் சந்தோஷ் இயக்குனராக வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் தனஞ்செயனை சந்திக்கும் காட்சியில், பின்புறத்தில் இயக்குனர் திருவின் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். தற்பொழுது தனஞ்செயன் தயாரிப்பில் , திருவின் இயக்கத்தில் ' மிஸ்டர் சந்திரமௌலி ' படத்தில் சந்தோஷ் நடிக்கவுள்ளார் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.