சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் கடைசியாக வெளி வந்த டகால்டி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து வந்த சந்தானம் தற்போது நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் வேறு சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை  பலூன் படத்தை தயாரித்த சினிஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: இளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே?... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...!

சந்தானம் 3 வித கெட்டப்புகளில் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 3 கெட்டப்புகளில் சந்தானம் இருப்பது ஒருவேலை டைம் டிராவல் படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. 3 வித கெட்டப்புகளை தினமும் ஒவ்வொன்றாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே டிக்கிலோனா படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று சந்தானம் வெளியிட்டுள்ள செகண்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டனர். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்... அந்தணர் குறித்து அவதூறு... காட்மேனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்புகள்...!

இந்தியில் அமீர்கான் நடித்த பிகே படத்தை போல ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக அந்த இடத்தை மட்டும் தோசைக் கல்லை வைத்து மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் சந்தானம். அந்த போஸ்டரை பார்த்த சந்தானம் ரசிகர்கள் பலரும் முற்றும் துறந்த ஞானி கலாய்த்து வருகின்றனர். சிலரோ ஷகிலா பட போஸ்டரை விட உங்களுடைய போஸ்டர் படுமோசமாக இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ சந்தானம் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது தான் உண்மை.