ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் காட்மேன் என்ற வெப் சிரீஸ் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த இணைய தொடரின் டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே?... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...!

 "பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு"  "நீ வேதம் படிக்கணும் அய்யனார்", "இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன்"  போன்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் அந்தணர்களை அவமதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதெல்லாம் போதாது என்று பிராமணராக மாற முயலும் டேனியல் பாலாஜி ஒரு பெண்ணுடன் படு நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகளும், சரக்கடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் பிராமணர் அமைப்புகள் மட்டுமல்லாது, இந்து அமைப்புகளும் காட்மேன் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், காட்மேன் வெப் தொடரில் பிராமணர்களை பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களும், கொச்சைப்படுத்தும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலமாக வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வேண்டுமென்றே குறிப்பிட்ட சமூகத்தினரை அவமானப்படுத்தி அவர்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், காட்மேன் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், zee 5 நிர்வாக இயக்குநர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

இது போல், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதம் வகுத்துக் கொடுத்த வியாசன் ஒரு மீனவன் என்பதை மறைத்து விட வேண்டாம்; வேதம் அனைவரும் படிக்கலாம் விரும்பியவர்கள் படிக்கலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை! இந்து சாமியார் கைது செய்யப்பட்டு செல்வது போலவும், மிகுந்த ஆபாச காட்சிகள் நிறைந்த படக் காட்சிகளையும் அமைந்திருக்கிறார்கள்.  குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை, சாதி சிறுபான்மை பிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் படியாக காட்சி அமைத்ததை இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் இந்த படம் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் படத்தை வெளியிடக் கூடிய தொலைக்காட்சி ஊடகம் போன்றவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்காவிட்டால் தொலைக்காட்சியின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.