எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் உருவாகி திரைப்படம் “டிக்கிலோனா”. நடிகர் சந்தானத்துடன்,  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் வேறு சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். 

பலூன் படத்தை தயாரித்த சினிஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு சந்தானம் மூன்று கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அன்றிலிருந்து 3 நாட்களுக்கு சந்தானத்தில் 3 கெட்டப்புகளின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

அதன்படி ஷகிலா பட போஸ்டரையே மிஞ்சும் அளவிற்கு ஒட்டுத்துணி கூட இல்லாமல் அந்த இடத்தை மட்டும் தோசைக்கல் வைத்து மூடிய படி, முற்றும் திறந்த நிலையில் சந்தானம் கொடுத்திருந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது. அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து வரும் சந்தானம் வெற்றிக்காக இப்படி களம் இறங்கிவிட்டாரே என ரசிகர்கள் நக்கலடித்தனர். ஏற்கனவே இரண்டு லுக்குகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கடல் கன்னியாக மாறிய ஸ்ரேயா... குட்டை உடையில் தண்ணீரில் மிதந்த படி கவர்ச்சியில் தாராளம்...!

இந்த போஸ்டரில் சந்தானம் மட்டுமின்றி, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் யோகிபாபுவும் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக டகால்டி படத்தில் சந்தானம் + யோகிபாபு காமெடி பேசப்பட்டது. மீண்டும் அதே கூட்டணி டிக்கிலோனா படத்தில் கைகோர்த்துள்ளதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.