நேற்றைய தினம், குடிபோதையில் தாறுமாறாக சொகுசு காரை ஒட்டி சென்று,  நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காரை நிறுத்தாமல் தப்பி சென்ற நடிகர் சக்தி தற்போது தான் செய்த தவறுக்காக வருந்தி ட்விட்டர் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

'நினைத்தாலே இனிக்கும்', 'ஏதோ செய்தாய் என்னை' , 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்'  உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க முடியாததால் தற்போது திரைப்படம் நடிப்பதை குறித்து கொண்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய,  பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட பின் மீண்டும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில்,  நேற்று சென்னை சூளைமேட்டில் குடிபோதையில் தன்னுடைய சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி சென்று,  இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த ஒருவரது கார் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இவரை மடக்கிப் பிடித்த மக்கள், இவர் குடி போதையில் இருந்ததாலும், பிரபலம் என்பதாலும்...  அண்ணாநகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  சக்தியிடம் விசாரணை நடத்திய  போது அவர் போதையில் கார் ஓட்டியது தெரியவந்தது.

மேலும் நிற்கக்கூட நிதானமில்லாமல் தன்னுடைய வேஷ்டி அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் இருந்த இவரை, போலீசார் குடி போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.

தற்போது, தான் செய்த தவறுக்காக, முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் சக்தி.  இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில் "நேற்றைய செயலுக்காக மிகவும் வருந்துகிறேன்.  இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதியாக கூறுகிறேன்.  இந்த சம்பவம் தனக்கு ஒரு பாடம் என்றும் இனி குடித்துவிட்டு யாரும் வண்டி ஓட்ட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.