வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!  நடிகர் ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மனுக்கள் தள்ளுபடி செய்தது ஏன்..? 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களை எதிர்த்து சங்கரதாஸ் சுவாமிகள் அணி என்ற பெயரில் நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

சொல்லப்போனால் நாசருக்கு எதிராக பாக்கியராஜும் விஷாலுக்கு எதிராக நடிகர் ஐசரி கணேஷ் களத்தில் குதித்துள்ளனர். மேலும் மற்ற பதவிகளுக்கு போட்டியிட்ட நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி கணேஷ், விமல் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக முறையாக சந்தா செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த காரணத்தை காட்டி இவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ள விஷயம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.