எழுத்தாளர், பத்திரிக்கையாளர், என்பதைத் தாண்டி... 'குக்கூ' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர் ராஜூமுருகன்.

இவர் எழுதி இயக்கியிருந்த இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து இவர் எழுதி, இயக்கி, 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது, பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்தது.

மேலும் அதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெளியான 'ஜிப்ஸி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குனர் ராஜு முருகனுக்கும் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு, திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமான இருந்த ராஜு முருகனின் மனைவி ஹேமா சின்ஹாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலமுடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உச்ச கட்ட மகிழ்ச்சியில் துள்ளி குறித்து வருகிறாராம் இயக்குனர் ராஜு முருகன். மேலும் பலர் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.