Asianet News TamilAsianet News Tamil

முத்தலாக் தடைச்சட்டம்..."இஸ்லாமிய மக்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்ற ஆணவப்போக்கு -நடிகர் ராஜ்கிரண்...

"இஸ்லாமிய மக்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற ஆணவப்போக்கில், குறுக்கு வழியில், "முத்தலாக் தடைச்சட்டம்" நிறைவேற்றியிருப்பது,இந்திய அரசியல் சாசனத்தையும்,
இந்திய இறையாண்மையையும்,கேலிக்கூத்தாக்கியிருக்கிறது”என்கிறார் இயக்குநரும் நடிகருமான ராஜ்கிரண்.

actor rajkiran writes about muththalak issue
Author
Chennai, First Published Aug 4, 2019, 11:46 AM IST

"இஸ்லாமிய மக்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற ஆணவப்போக்கில், குறுக்கு வழியில், "முத்தலாக் தடைச்சட்டம்" நிறைவேற்றியிருப்பது,இந்திய அரசியல் சாசனத்தையும்,
இந்திய இறையாண்மையையும்,கேலிக்கூத்தாக்கியிருக்கிறது”என்கிறார் இயக்குநரும் நடிகருமான ராஜ்கிரண்.actor rajkiran writes about muththalak issue

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில்,...."தலாக்" என்ற அரபுச்சொல்லுக்கு, "விவாகரத்து" என்று பொருள்."முத்தலாக்" என்றால்,மூன்று முறை "விவாகரத்து" செய்வது.

இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டமாக உள்ள "இந்த விவாக ரத்து" முறை, பெண்ணுரிமையை பேணும்,உலகளாவிய சட்டங்களில் உயர்வானது...

இஸ்லாமியர் ஒருவருக்கு, தன் மனைவியின் மீது அதிருப்தி ஏற்பட்டுஅவரை விவாகரத்து செய்து விட முடிவெடுத்தால், தன் மனைவியிடம்,"உங்களுடனான என் விவாக பந்தத்தை,
இன்றோடு ரத்து செய்கிறேன்"என்று தெரியப்படுத்த வேண்டும். (உடனே அந்த விவாகம் ரத்தாகாது)

அதன் பிறகு தன் மனைவி இந்த விசயத்தைப்பற்றி நன்கு யோசித்து முடிவெடுக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

(அந்த அவகாச காலத்தில், இரண்டு குடும்ப பெரியவர்களும், இதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை, கணவன், மனைவி இருவருக்கும் எடுத்துச்சொல்லி, விவாகம் ரத்தாவதை தடுக்க எல்லா வித முயற்சிகளும் எடுக்க வேண்டும்...) அந்த அவகாசத்தில், கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை உணர்ந்து திருத்திக்கொண்டால், எந்தப்பிரச்சினையும் இல்லாமல்
ஒற்றுமையாக சேர்ந்து வாழலாம்...

கால அவகாசத்திற்குப்பிறகும், இருவருக்குள்ளும் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லையென்றால், இரண்டாவது முறையாக, கணவன், தன் மனைவியிடம்,"உங்களுடனான விவாக பந்தத்தை
இன்றோடு ரத்து செய்கிறேன்" என்று தெரியப்படுத்த வேண்டும்... (இப்பவும் அந்த விவாகம் ரத்தாகாது)

திரும்பவும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு, (திரும்பவும் இரு குடும்பத்தாரும் இருவருக்குள்ளும் சமாதானத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.)

இரண்டு கால கட்ட முயற்சிகளுக்குப்பிறகும், இருவருக்குள்ளும், அல்லது யாராவது ஒருவருக்கு சேர்ந்து வாழ்வதில் திருப்தியில்லையென்றால், மூன்றாவது முறையாக, கணவன், தன் மனைவியிடம்,
"உங்களுடனான விவாக பந்தத்தை இன்றோடு ரத்து செய்கிறேன்" என்று தெரியப்படுத்த வேண்டும்...

இப்பொழுது, இவர்களுக்குள் விவாக பந்தத்தை ஏற்படுத்த முன் நின்ற, அந்த வட்டார, மார்க்க பெரியோர்கள், இந்த விவாக ரத்தை உறுதி செய்ய வேண்டும்...இது தான் "முத்தலாக்" என்பது.
இது ஆண்களுக்கான நடைமுறை.actor rajkiran writes about muththalak issue

பெண்களுக்கு,  இன்னும் சிறப்புச்சலுகையாக, தன் கணவனோடு சேர்ந்து வாழ்வது பிடிக்கவில்லையென்றால், காலக்கெடுவெல்லாம் கொடுத்து,,காத்துக்கொண்டிருக்காமல்,"குலா" என்ற பதத்தை பயன்படுத்தி, உடனே கணவனை "விவாக ரத்து"பண்ணி விடலாம்...

இஸ்லாம், பெண்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் எவ்வளவு மதிப்பளிக்கிறது, பாருங்கள்... இது தான், இஸ்லாமிய மார்க்கம் பின்பற்றும், "ஷரீயத் சட்டம்".இந்த சட்டத்தை,
இந்திய அரசியல் சாசன சட்டம் அங்கீகரித்துருக்கிறது. (பொது சிவில் சட்டப்படி, கணவனோ, மனைவியோ விவாக ரத்து செய்து கொள்வதில், வக்கீல், நீதி மன்றம் என்று
வருடக்கணக்காக அலைந்து திரிந்து, நீதி மன்றத்தில், கேள்விகளால் துகிலுரியப்பட்டு, கேவலப்பட்டு, பணம் காசை இழந்து, நிம்மதி குலைந்து,இன்னும் என்னென்னவோ நடைமுறை சிக்கல்களையெல்லாம் தாண்டி, வயதும் வாலிபமும் போன பின் தான், விவாக ரத்து பெற முடியும்... அதிலும், வாழ்க்கை முழுவதையும் தொலைத்து, கிழவன் கிழவி ஆகியும்,விவாக ரத்து பெற முடியாதவர்களும் இருக்கிறார்கள்)

இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றியோ, இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தைப்பற்றியோ எவ்வித ஞானமும் இல்லாத,  ஒரு குறிப்பிட்ட மத சார்புள்ள, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, அரசியல் சாசன சட்ட அமர்வுக்கு கொண்டு செல்லாமலே,"இஸ்லாமிய மக்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்ற ஆணவப்போக்கில்,குறுக்கு வழியில், "முத்தலாக் தடைச்சட்டம்" நிறைவேற்றியிருப்பது,இந்திய அரசியல் சாசனத்தையும், இந்திய இறையாண்மையையும், கேலிக்கூத்தாக்கியிருக்கிறது....என்று பதிவு செய்திருக்கிறார் ராஜ்கிரண்.

Follow Us:
Download App:
  • android
  • ios