சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திருவண்ணாமலை வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, தமன்னா, சுனில், வஸந்த் ரவி, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜெயிலர் படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் லால் சலாம். இப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தான் இயக்குகிறார். இப்படத்தில் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினி கெஸ்ட் ரோலில் நடிப்பதால், லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்... அந்த நடிகருடனான லிப்லாக் முத்த காட்சிக்கு பின் வாயை டெட்டால் ஊற்றி கழுவினேன் - பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்

லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடித்த காட்சிகளை முதலில் மும்பையில் படமாக்கிய ஐஸ்வர்யா, அடுத்து புதுச்சேரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். அங்கு ரஜினியை பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து குவிந்தனர். அதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரல் ஆகின.

Scroll to load tweet…

அந்த நிலைமை தான் தற்போது திருவண்ணாமலையிலும் உள்ளது. லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளை தற்போது திருவண்ணாமலையில் படமாக்கி வருகிறார் ஐஸ்வர்யா, இதற்காக திருவண்ணாமலை வந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர். தன்னைப் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு காரில் இருந்தபடியே கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார் ரஜினி. அப்போது ரசிகர்கள் தலைவா என கத்தி ஆரவாரம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... துரோகம் செய்த கணவர்... இன்ஸ்டாவில் புகைப்படங்களை அதிரடியாக நீக்கிய அசின்... அப்போ விவாகரத்து கன்பார்மா?