MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • துரோகம் செய்த கணவர்... இன்ஸ்டாவில் புகைப்படங்களை அதிரடியாக நீக்கிய அசின்... அப்போ விவாகரத்து கன்பார்மா?

துரோகம் செய்த கணவர்... இன்ஸ்டாவில் புகைப்படங்களை அதிரடியாக நீக்கிய அசின்... அப்போ விவாகரத்து கன்பார்மா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 28 2023, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Asin

Asin

தமிழ் திரையுலகில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றவர் தான் அசின். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதனால் ராசியான நடிகையாகவும் வலம் வந்தார் அசின். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு அடுத்த ஆண்டே அரின் என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார் அசின்.

24
Asin

Asin

சினிமாவில் இருந்து விலகி இல்லற வாழ்க்கையில் பிசியான அசின், தன் மகளுடன் எடுத்த புகைப்படங்கள், தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார். அசின் - ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவருமே எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்... அந்த நடிகருடனான லிப்லாக் முத்த காட்சிக்கு பின் வாயை டெட்டால் ஊற்றி கழுவினேன் - பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்

34
Asin

Asin

அசினின் கணவர் ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதை அறிந்த அசின், அவரை பலமுறை எச்சரித்தும் அவர் அந்த பெண் உடனான உறவை துண்டிக்க மறுத்ததால் மனமுடைந்த அசின், ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை அசின் அவரது கணவரை பிரிந்து தனது மகள் அரின் உடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
Asin

Asin

அசின் - ராகுல் சர்மா ஜோடியின் விவாகரத்து மேட்டரை உறுதி படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் நடிகை அசின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதற்கு முன்னர் விவாகரத்து செய்த பல நடிகைகள் இதுபோன்று செய்ததை பார்த்திருக்கிறோம். அதே பாணியில் அசினும் செய்துள்ளதால் அவரின் விவாகரத்து கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை போல் மகிழ் திருமேனியையும் கழட்டிவிடப் போகிறாரா அஜித்? விடாமுயற்சி தாமதம் ஆவது ஏன்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved