அந்த நடிகருடனான லிப்லாக் முத்த காட்சிக்கு பின் வாயை டெட்டால் ஊற்றி கழுவினேன் - பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற வெப் தொடரில் நடித்துள்ள பிரபல நடிகை, முதல் லிப்லாக் காட்சியில் நடித்த பின்னர் தன் வாயை டெட்டால் ஊற்றி கழுவியதாக கூறியுள்ளார்.
Neena gupta
இந்தியில் வெளியான வெப் தொடர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற வெப் தொடர் தான். அந்த வெப் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஜூன் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Neena gupta
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடிகைகள் தமன்னா, மிருணாள் தாக்கூர், கஜோல், நீனா குப்தா, நடிகர் விஜய் வர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த வெப் தொடரை அமித் ரவீந்திரநாத் சர்மா, கொன்கொனா சென் சர்மா, பால்கி, சுஜாய் கோஷ் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த வெப் தொடரின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை போல் மகிழ் திருமேனியையும் கழட்டிவிடப் போகிறாரா அஜித்? விடாமுயற்சி தாமதம் ஆவது ஏன்?
Neena gupta
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரின் புரமோஷனுக்காக நடிகை நீனா குப்தா அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் லிப்லாக் கிஸ் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சீரியலில் லிப்லாக் காட்சியில் நடித்தது நான் தான். பல வருடங்களுக்கு முன் திலீப் தவான் என்பவருடன் சீரியலில் தான் முதல் லிப்லாக் காட்சியில் நடித்திருந்தேன். அந்த காட்சியில் நடித்த பின்னர் அன்றைய நாள் இரவு எனக்கு தூக்கமே வரவில்லை.
Neena gupta
ஏனெனில் நான் அந்த காட்சிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராகவில்லை. மிகவும் பதற்றமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டேன். அந்த சீனில் நடித்து முடித்த பின்னர் எனது வாயை டெட்டால் ஊற்றி கழுவினேன். தெரியாத, பரீட்சயம் இல்லாத ஒருவரை முத்தமிட்டது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என நடிகை நீனா குப்தா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மகன் கௌஷிக் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரோஜா! வைரலாகும் போட்டோஸ்.!